தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் திடீரென உரையாடியுள்ளார்.
இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், இந்த உரையாடலின்போது வரம்பு மீறிய வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.





