பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் நாமல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் சந்தித்தார்.

கிளிநொச்சி பாரதிபுரம், பன்னங்கண்டி, கல்லாறு, பாடசாலைகளிலும், தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்திலும் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார்.

நாமலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வருகை தந்தார்.