பதின்மூன்றாம் நாளாக இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பதின்மூன்றாம் நாளாக இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று பதின்மூன்றாம் நாளாக தொடர்கின்றது.

இந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தொடர்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்ததாகவும் எனினும் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

World News

Srilanka News

Tamilnadu News

Video News