மைத்திரியின் சகோதரர் படுகொலை வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரிமார் சபையின் முன்னிலையில் நவம்பர் 20 தொடக்கம் 30 வரை நடைபெறுமென பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரிகள் சபை முன்னால் தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

‘வெலி ராஜு’ என அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன 2015 மார்ச் மாதம் கோடரியொன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கின் அரச தரப்பு சாட்சிகளில் ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரான டட்லி சிறிசேனவும் இடம்பெறுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *