ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி: மனோ தித்தவெல

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஜ.நாவில் கால அவகாசம் கோருவது உறுதி: மனோ தித்தவெல

ஐ.ந மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையில் ஐ.ந மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டுகால அவகாசம் கோர முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி போர்க் குற்றவிசாரணை மற்றும் இலங்கைக்கான கால அவகாசம் நீடித்தல் தொடர்பான செய்திகளை, எமது ஆதவன் செய்திப்பிரிவு உடனுக்குடன் விரிவான செய்தித்தொகுப்புக்களுடன் தொடர்ச்சியாக பிரசுரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites