மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராகிறார் அருட்பணி ஜெபரட்ணம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி அறிவித்தலை வத்திகானிலுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் ஆயராக அருட்பணி ஆற்றிவந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை சுகயீனம் காரணமாக ஆயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதனை அடுத்து மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலராக திருச்சபை நியமித்திருந்தது.

இந்நிலையில், மன்னார் மறை மாவட்டத்திற்கான புதிய ஆயராக அருட்பணி ஜெபரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரின் பதவியேற்பு தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *