நல்லிணக்கம் ஆன்மீக தலைவர்களின் முக்கிய பணியாக வேண்டும்- ஜனாதிபதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
திரிபிடகம், விவிலியம்,அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

நேற்று தங்கொடுவை சிங்கக்குளியில் நடைபெற்ற “எரபது வசந்தம்”தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாசார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *