இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்!

இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட ஏனைய வௌிநாடுகளும் அவ்வாறான திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.

இவை அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News