காணி விடுவிப்பு: தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து பேசுவோம் என்கிறார் சம்பந்தன்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பில்  தீர்வொன்றைப் பெறும் முகமாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடனான கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மேற்படி காணி விடுவிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் வினவியபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *