போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது : கோட்டா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நல்லிணக்கத்தை போர்க்குற்ற விசாரணைகள் ஒருபோதும் தோற்றுவிக்காது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளையும், விசாரணைகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம் இலங்கை வாழ் சமூகங்களை இணைக்க முடிõது.

அவ்வாறு செய்ய நினைத்தால், அனைவருக்குமான நல்லிணக்கமாக அது இருக்காது. போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் சென்று இந்த விடயங்கள் பற்றிப் பேசினால் சமூகங்கள் ஒன்றுபடாது. அது இடைவெளியைத் தான் அதிகப்படுத்தும்.

தமிழர்கள் போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசும் போது, பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள், பௌத்த மதகுருமார் மற்றும் காவல்துறையினரின் படுகொலைகள், போரின் போது தாம் எதிர்கொண்ட கொடூரங்கள் பற்றி பேசுவார்கள். அது போருக்குப் பிந்திய குணமாக்கல் செயற்பாடுகளின் வேகத்தைக் குறைக்கும்.

சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் போன்ற விடயங்கள் தற்போது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் இலங்கையில் உள்ள இரண்டு இனங்களுக்கிடையில் விரிசலையே ஏற்படுத்தும்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு சர்வதேசமும் ஐ.நா.சபையும் ஆதரவினை வழங்கியுள்ளன. இவ்விடயம் இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்தக் கூடியது. எனினும் பிரதான இரு இனங்களுக்கிடையில் மேலும் கசப்புணர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் மூலம், மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு இனங்களுக்கிடையே தொடர்ந்தும் பகை உணர்வுகள் அதிகரித்துச் செல்ல வாய்ப்பாக அமையும்.
சீனா தொடர்பான நிலைப்பாடே இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டது. அதனை அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் நூல் வெளிப்படுத்தியிருந்தது.

எனினும் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சீனா தொடர்பான விவகாரம் தலைதூக்க ஆரம்பித்தது.

சீனாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறை ஆகியவற்றை சீனாவிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அஜித் தோவல் இரண்டு தடவைகள் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *