கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததும் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொது மக்கள் அடிப்படை வசதிகளற்ற மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டு பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இதுவரை அவற்றிற்கு எந்தவொரு தீட்வும் கிடைக்காத நிலையில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருதனர்.

இந்த நலையில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *