கரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கரு ஜயசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்து

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகர் கருஜயசூரிய உடன் பதவிலியிருந்து விலகுவதே சிறப்பாக இருக்கும் என வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டு மக்கள் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறார்கள். அந்த முடிவினை பிரதேச சபை தேர்தலின்போதே வழங்கினார்கள். மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் அந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இது வரலாற்று வெற்றியாகும்.

எனவே மக்களால் பெற்றுக்கொண்ட இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குரிய இடமாக நாடாளுமன்றம் மாற வேண்டுமாயின் அவர் பதவி விலகுவதே சிறந்ததாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News