அடுத்த பிரதமருக்கு நான்தான் தகுதியானவன்; ஜோன் அமரதுங்க

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கான அத்தனைத் தகுதிகளும் தனக்கு இருப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருக்கும் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்தபடியான சிரேஷ்ட உறுப்பினராக தாம் விளங்குவதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

கொழும்பு – வத்தளை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர்களுடன் உரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.