இடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும்! – அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்று அன்று கூடும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக இதுவரை செயற்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழு, சுமார் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் கூடித் தயாரித்த இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் முழு அளவில் இறுதி செய்யப்பட்டு, குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும்போது அங்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் அது சமர்ப்பிக்கப்படும்.

அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டடல் குழு கொழும்பில் எழுபத்து மூன்றாவது தடவையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

அப்போதே இடைக்கால அறிக்கையை அரசமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பிக்கும் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அனேகமாக எல்லாத் தரப்புகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே வழிகாட்டல் குழு இறுதி செய்திருந்த இடைக்கால அறிக்கையின் வடிவத்தை அப்படியே அங்கீகரிப்பது என்றும், கட்சிகள் அளித்த அறிக்கைகளைப் பின் இணைப்பாகச் சேர்த்துக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையுடன் முன் இணைப்பாகச் சமர்ப்பிக்கப்படவேண்டிய செய்தியின் வாசகமும் இறுதி செய்யப்பட்டது.

எதிர்வரும் 20, 21,22 ஆம் திகதிகளில் ஒரு நாளில் அரசமைப்புப் பேரவையாகச் செயற்படும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவும் – அத்திகதியில் இந்த இடைக்கால அறிக்கையை உறுப்பினர்களுக்குக் கையளித்து அதனை வெளியிடவும் முடிவுசெய்யப்பட்டது.

பெரும்பாலும் எதிர்வரும் 21ஆம் திகதியே நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *