அமைச்சுப் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்க! – ரவியிடம் பந்துல வலியுறுத்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதாகக் கூறி இவர்கள் செய்த வேலை என்ன? அது பாரிய கொள்ளையாகும். வரலாற்றில் அதிகமான கடன் பெற்றுக்கொண்ட காலப்பகுதி 2001 தொடக்கம் 2004 வரையிலான காலப்பகுதியே.

அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின்கீழ் அதிகூடிய கடன்தொகையாக 100 இற்கு 80 வீதம்வரை பெற்றுக்கொள்ளும் வகையில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு கடன்களைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோல் கடந்த இரண்டு வருடகாலமாக நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க இதனை 83 சதவீதம் வரை கொண்டுசென்றுள்ளார். இதுதான் இவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை.

ரவி கருணாநாயக்கவுக்கு வெட்கம், பயம் ஏதும் இல்லாமையாலேயே அனைத்தையும் மேற்கொண்டுவிட்டு ஒன்றும் செய்யாதவர்போன்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ள அவர் உடனடியாக தனது பதவியை இராஜிநாமா செய்யவேண்டும்” –
என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *