வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சிக்கி வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News