இயற்கை அனர்த்தத்தால் தொற்றுநோய் அபாயம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டின் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தையடுத்து, நீரால் பரவும் நோய்கள் தலைதூக்கும் சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளின் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாந்திபேதி, வயிற்றுளைவு மற்றும் சரும வியாதிகள் துரிதமாகப் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மருத்துவ உதவிகள் மாவட்ட மற்றும் பிரதேச சுகாதார வைத்திய பணிப்பாளர்களின் அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *