ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலம் 1400 உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு கிடைக்கும் என சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய அளவில் வரிச்சலுகை கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் ஆயிரத்து 400 உற்பத்திகள் 17 நாடுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளன. இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *