ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை; விஷேட பிரதிநிதிகள் குழு ஸ்ரீலங்கா விஜயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது.

நாட்டில் நிலவும் அரசியல்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட நிலைமைகளை அவதானிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதிநிதிகள் சிலர் குழுக்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று கண்காணிப்புகளை மேற்கொண்டனர்.

அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *