கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார வெல்கம எம்.பி. போர்க்கொடி தூக்கியிருந்தாலும்,

கடும் எதிர்ப்பையும்மீறி கோத்தபாயவை களமிறக்கும் தீர்மானத்துக்கு ராஜபக்சக்கள் வந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.குறித்த தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின்னர், குமார வெல்கம, மஹிந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில், அரசியல் தீர்மானமொன்றை எடுப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

“ஜனநாயகத் தலைவர் ஒருவரே நாட்டை ஆளவேண்டும். இராணுவத்தில் இருந்தவர்களுக்கு இடமளிக்கமுடியாது. தேசிய உடை அணிந்தவரே அதற்கு பொருத்தம்.” என்றெல்லாம் குமார வெல்கம கடந்த காலங்களில் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.