இளஞ்செழியன் உட்பட அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! – பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணம்செய்தவேளை நேற்றுமுன்தினம் மாலை  நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அந்தச்  சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு குறித்து கவனஞ்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மறைவையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தமது கடமையை சரியாகச் செய்கின்ற இத்தகைய அதிகாரிகள் முழு அரச சேவைக்கும், பொலிஸ் திணைக்களத்துக்கும் முன்னுதாரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி விரைவாக குணமடையவேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *