இராஜிநாமா வேண்டாம்! – அமைச்சர் விஜயதாஸவிடம் தேரர்கள் குழு கோரிக்கை 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர்.
அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜிநாமா செய்யவேண்டாம் எனக் கோருவதற்காகவும் தாம் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தால் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
“அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிக்கவேண்டும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இராஜிநாமா செய்யவேண்டாம்” என்று கோரிக்கை விடுப்பதாக ஊடகவியலாளர்களிடம் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *