தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்: சமகால அரசியல் குறித்து விவாதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் மற்றும் சமூக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் கட்சியின் மத்திய செயற்குழு மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கூடியுள்ளது.

ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று காலை குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், எஸ்.சிறிதரன், துரைசிங்கம், எஸ்.சுமந்;திரன், எஸ்.சிறிநேசன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன், எஸ்.நடராசா உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரது பிரசன்னத்துடன் கூட்டம் இடம்பெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *