பொதுபலசேனாவை இன்றும் கோட்டாவே இயக்குகின்றார்! – அமைச்சர் எஸ்.பி. குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாலூட்டி வளர்த்த கோட்டாபய ராஜபக்ஷவே இன்றும் அந்த அமைப்புக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் குழுக்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாதுகாப்பு வழங்கி அந்த அமைப்பை வளர்த்தெடுத்தவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷதான். இன்று அந்த அமைப்பு இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதன் பின்னணியிலும் அவர்தான் இருக்கின்றார்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *