வடக்கில் தாக்குதல் ஆரம்பமே! – போகப் போக அவை அது அதிகரிக்கும் என்கிறார் மஹிந்த 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பமாகும்போது பொலிஸார் மீதுதான் முதலில் தாக்குதல் நடத்தினார்கள். வடக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. போகப் போக இன்னும் நடக்கும்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அலுவலர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் வெறும் ஆரம்பம் மட்டுமே. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாகும்போது ஆரம்பத்தில் இவ்வாறுதான் நடந்தது. அவர்கள் ஆரம்பத்தில் பொலிஸார் மீதுதான் தாக்குதல் நடத்தினார்கள். இப்போதும் அப்படித்தான் நடக்கின்றது. போகப் போக இன்னும் நடக்கும். இந்த அரசு இவற்றை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரவேண்டும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *