மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அஸ்கிரிய உள்ளிட்ட பௌத்த உயர் பீடங்களில் மகாநாயக்கர்களை, விரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென மகாநாயக்கர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர்.

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்துள்ள நிலையில், மகாநாயக்கர்களின் இந்த அறிவிப்பு தமிழ் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மகாநாயக்கர்களை சந்தித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் புதிய அரசியல் யாப்பின் அவசியம் உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *