வடக்கு மாகாண அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் நியமனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கு மாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

விவசாய அமைச்சு முதலமைச்சரின் கீழும், அதன் பிரிவில் இருந்த கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சுக்கள் அனந்தி சசிதரனுக்கும், கல்வி பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கந்தையா சர்வேஸ்வரனுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தற்காலிகமாக இரு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், 3 மாதங்களின் பின்னர் தெரிவுக்குழுவின்ஊடாக அமைச்சர்கள் தெரிவு இடம்பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

புதிய அமைச்சர்கள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *