பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது.

இந்தநிலையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தினை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிடவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News