ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் கட்சி தாவுவது உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாம் தற்பொழுது அந்த 20 பேருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். தற்பொழுதும் தனது வாகனத்தில் அவ்வாறு வெளியேறவுள்ள ஒருவர் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.