13 வயது சிறுமி கூட்டு வல்லுறவு! – தாய், தாத்தா, மாமா பொலிஸாரிடம் சிக்கினர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுமியின் தாத்தாவும், இராணுவ சிப்பாயாக இருந்துவரும் மாமாவும் தனமல்வில பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இப்பாலியல் வல்லுறவுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் சிறுமியின் தாயாரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், தாயின் இரண்டாவது கணவனும் இந்தச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில், மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட சிறுமியை, சிறுமியின் தாத்தா தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமையும், விடுமுறையில் வீடு வந்திருந்த போதெல்லாம், மாமாவான இராணுவ சிப்பாயும் அடிக்கடி சிறுமி மீது பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயின் கணவன் ஏற்கனவே இறந்துவிட்டதால், அவர் தற்போது தலைமறைவாகியிருக்கும் நபரை மறுமணம் செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள நபரை விரைவில் கைதுசெய்ய முடியும் என்றும் சியாம்பலாண்டுவைப் பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *