யுத்தம் முடிவடைந்தும் மக்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்: மகேஸ்வரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டு.மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என ஜக்கிய தேசிய கட்சி மட்டு.அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் கல்லடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இந்த மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதேசங்கள் எவ்வித அபிருத்தியும் அடையாது பின்தங்கிய நிலையில் உள்ளது.
படுவான்கரைப் பிரதேசத்தில் பல பகுதிகளில் குடிநீர், மின்சாரம், வீதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். அமைச்சர் சரத் பொன்சேகா இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இதன் அடிப்படையில் அவர் இம்மாவட்டத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதியளித்துள்ளார்” என வி.மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *