யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைத்தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய ஹேமரத்ன என்பவர் உயிரிழந்திருந்தார்.

இவர் கடந்த 17 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது மெய்ப்பாதுகாவலராகவும் பணியாற்றியிருந்தார்

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *