புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு, விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பட்டியலிடுவதற்கு, பயன்படுத்தப்பட்ட நடைமுறைகளின் சட்டபூர்வ தன்மை தொடர்பானதே என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டதற்கான முக்கியமான காரணங்களை நீதிமன்றம் மதிப்பீடு செய்திருக்கவில்லை. 2011-2015 காலப்பகுதியை உள்ளடக்கியதாகவே நீதிமன்றத்தின் ரத்து நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்ட 2015-2017காலப்பகுதியை இந்த தீர்ப்பு உள்ளடக்கவில்லை.

இதன் மூலம், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும்,ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீவிரவாத அமைப்பாகவே பட்டியலிடப்பட்டிருக்கும்.

தற்போதைய தீர்ப்பானது கவனமாக பகுப்பாய்வு செய்யப்படும்.இந்தப் பட்டியலை சட்டபூர்வமானதாக உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *