பரிகார பூஜை செய்ய இந்தியா செல்லும் பிரதமர் ரணில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

தென் இந்தியாவில் கோயில் ஒன்றில் பூஜை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது பாரதூரமான கெட்ட காலம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பரிகாரமாக தென் இந்தியாவில் உள்ள கோயிலில் பூஜை ஒன்றை செய்யும் சதாசிவம் என்பவர் யோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியா செல்லும் ரணில், 27 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு வந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவது வழமை.

அத்துடன் இந்திய ஜோதிடர்களிடம் தமது அரசியல் எதிர்காலம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர்.

ஆந்திராவின் திருப்பதி, தமிழகத்தின் ராமமேஸ்வரம், ஸ்ரீரங்கம், கேரளாவின் குருவாயூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு இலங்கையின் அரசியல்வாதிகள் அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *