நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலி பொருளாக மாற்றிய கூட்டு எதிர்க்கட்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னணியில் இருந்து செயற்பட்டவர்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டு எதிர்க்கட்சி இப்படியான செயற்பாடுகளை கையாண்டு வருகின்றது.

மருந்து விலைகள் குறைக்கப்பட்டமை, ஸ்டென்ஸ் விலையை குறைந்தமை போன்ற ராஜித சேனாரத்ன மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *