தொழிலாளர் தினத்தை கொண்டாட அருகதையற்று தெருவில் நிற்கின்றோம்: கேப்பாப்பிலவு மக்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்ற நிலையில், தொழிலாளர்களாகிய நாம் இத்தினத்தை கொண்டாட முடியாது நடுத்தெருவில் நிற்கின்றோம்” என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கேப்பாப்பிலவு மக்கள், மே தினமான இன்று (திங்கட்கிழமை) தொழில் உபகரணங்களை வீதியில் வைத்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதில் கலந்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பூர்வீக கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 62ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்ந்து வருகின்றது.

அங்கு தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய தாயொருவர் கூறுகையில், எமது சொந்த இடத்தை இராணுவத்தினர் தம்வசப்படுத்தி உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாம் தகர கொட்டில்களுக்குள் சித்திரவதைகளை அனுபவித்து வருகிறோம்.

கேப்பாப்பிலவிலுள்ள எமது சொந்த காணிகளை கையளிக்கும்வரை நாம் இங்கிருந்து நகர மாட்டோம்” என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *