சட்டத்தரணிகளை தமது செலவில் வியட்நாம் அழைத்துச் சென்ற நாமல் ராஜபக்ச

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்சவிற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் குழுவை நாமல் ராஜபக்ச உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் முதலாவது இலக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதியான கிஹான் குலதுங்கவை கொழும்பில் இருந்து இடமாற்றம் செய்வதாகும்.

கொழும்பு மேல் நீதிமன்றத்திலேயே ராஜபக்சவினரின் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கிஹான் குலதுங்க, பணத்திற்கு அடிப்பணியாத, நேர்மையான நீதிபதி எனக் கூறப்படுகிறது.

தம்மைக் காப்பாற்ற முன்னாள் நீதியமைச்சர் போன்ற எவரும் இல்லாத காரணத்தினால், நாமல் உட்பட ராஜபக்சவினர் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான சட்டத்தரணிகள் இருக்கவில்லை.

இதனால், சட்டத்தரணிகளின் கால்பந்தாட்ட அணி என்ற பெயரில் அணி ஒன்றை உருவாக்கி, வியட்நாம், சட்டத்தரணிகள் கால்பந்தாட்ட அணியுடன் போட்டி ஒன்று இருப்பதாக கூறி, தமது சொந்த செலவில் வியட்நாமுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்காக வேறு காரணங்களை கூறி நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல நீதிமன்றத்தின் அனுமதியை கோரி, நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சுற்றுலாப் பயணம் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இடையில் யோஷித்த ராஜபக்சவும் வியட்நாம் விஜயத்தில் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *