இலங்கையை ஒருபோதும் பாதுகாப்புத்தளமாக சீனா பயன்படுத்தாது: சீன தூதுவர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையை தாம் ஒருபோதும் பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப் போவதில்லை என இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானித்தால் இதனை அறிய முடியும் என்றும் கூறினார்.

இலங்கையில் சீன உளவுப்பிரிவு அதிகாரிகளோ, இராணுவத்தினரோ அழைத்துவரப்படவில்லை, எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை, சீனாவின் பாதுகாப்பு மையமாக பயன்படுத்தப்படக்கூடும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *