அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபருடன் முதல்வா் சந்திப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சட்டமா அதிபருடன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடவுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரிடம் வடக்கு முதல்வர் இதனை தெரிவித்துள்ளதோடு, அவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பலர், எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்தோடு, பலர் தண்டனை அறிவிக்கப்படாமலேயே பல வருட காலமாக சிறைகளில் உள்ள நிலையில், சிறையில் கழித்த நாட்களை தண்டனைக் காலமாக கருதி அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்களும், சமூக அமைப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, ஏனைய கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *