துபாய் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – ஸ்விடோலினா சாம்பியன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
துபாய் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – ஸ்விடோலினா சாம்பியன்

டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்று மகுடம் சூடினார்.

டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)- கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) பலப்பரீட்சையில் இறங்கினர். மழையால் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் வோஸ்னியாக்கியை வீழ்த்தி மகுடம் சூடினார். அவர் வென்ற 6-வது பட்டம் இதுவாகும்.

வெற்றிக்கு பிறகு 22 வயதான ஸ்விடோலினா கூறும் போது, ‘இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தரவரிசையில் டாப்-10 இடத்திற்குள் நுழைவேன் என்பது தெரியும். இதுவே எனக்குள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. இப்போது தான் நிம்மதியே வந்துள்ளது.

பெரிய போட்டித் தொடரில் நான் கைப்பற்றிய முதல் கோப்பை இதுவாகும். அந்த வகையில் இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்’ என்றார். இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் ஸ்விடோலினா 13-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites