Other News

பாரிய தேடுதலில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 100 பேர் கைது

ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இன்றுவரை 4 நாட்கள் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 26.05.2019

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் […]

சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற […]

துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நால்வர் கைது

பிலியந்தல – ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை குறித்த பிரதேசத்தில் கார் ஒன்றினை பரிசோதனை செய்தபோதே குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் சந்தேகநபர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் […]

ரொஷானின் சடலம்! கொலையா? தற்கொலையா?

மத்திய மாகாணம் – தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த பாதசாரதிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் மோதுண்டு இவ் இளைஞன் உயிரிழந்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் தலவாக்கலை, ஒலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய பெனடிக் ரொஷான் என்பவருடையது என தெரியவந்துள்ளது. […]

ஐ.நா வாகனங்கள் தொடர்பில் இராணுவ அதிகாரியின் கருத்து

ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்து தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது, இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை மாலிக்கு அனுப்பிவைப்பதற்கு […]

இரு சகோதரிகள் சடலமாக மீட்பு…

அனுராதபுரம் – மஹவிலச்சிய – எலபத்கம பிரசேதத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளை காணவில்லை என்று, நேற்று மாலை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய குறித்த சகோதரிகள் வசிக்கும் வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இதுவரையும் சடலமாக மீட்டுள்ளனர். குறித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்து தொடர்பிலான […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.05.2019

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். […]

வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்

இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். […]

ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது!

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளதெரிவித்தார். பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அதுகோரள மேலும் […]