தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப் படையினர் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை எதிர்பார்காத அதிரடிப்படையினர் சுதாரித்துக்கொண்டு, நக்சல்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். […]
Other News
கேரளாவில் கரை ஒதுங்கிய 40 உடல்கள்
கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக […]
மாகாண சபையில் இடம்பெறுவது குடும்ப சண்டையே
மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்ற ஆலோசனைகளை அரச அதிகாரிகள் கேட்கவேண்டும். நாம் சபையில் போடுகின்ற சண்டை குடும்பச் சண்டையே அதற்காக அதிகாரிகள் உறுப்பினர்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுக்கள் மீதான விவாதம் நேற்றையதினம் மாகாண சபையில் இடம்பெற்றது. இந்த அமர்வின் ஆரம்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: மாகாண […]
வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடு உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள் உயர் நீதிமன்றில் நேற்றுக் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர் நீதிமன்றப் பிரதிப் பதிவாளர் சட்டத்தரணி கிரிஷானி டி கோத்தகொடயிடம் நேற்றுக் கையளித்தனர். புங்குடுதீவு மாணவி […]
வாழைத்தோட்டத்தில் வாழைக்குலைகள் திருட்டு!
நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 25க்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் திருடப்பட்டுள் ளன. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் வந்த திருடர்கள் குறித்த தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கதலி வாழைக்குலைகளை களவாடிச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட வாழைக்குலைகளின் பெறுமதி 30ஆயிரம் ரூபாவுக்கு மேல் என செய்கையாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னரும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர். விவசாயிகளால் பயிரிடப்படும் விளை […]
இன்றைய ராசிபலன் 15.12.2017
மேஷம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டா கும். வாகன பழுதை சரி செய்வீர்கள். மனைவி வழி யில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். இரவு 8.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடை களை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். வழக்கில் […]
தொடர்ச்சியாக 15 வெற்றிகள்: மான்செஸ்டர் சிட்டி சாதனை நீடிப்பு
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் சிட்டி அணியின் சாதனை நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தொடர் பிரிமீயர் லீக். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் இதுவும் ஒன்று. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்வான்சி அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி […]





