Other News

டொனால்ட் ட்ரம்ப்

இலங்கைக்கான வரிச்சலுகையை மீண்டும் அங்கீகரித்தது அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் திட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த வரிச்சலுகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. நடப்பு வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கடந்த 23ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும், அதில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகத்தின் […]

யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப 10 வருட விசேட வேலைத்திட்டம்!

யுத்தத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, யுத்தத்திற்கு முன்னராக காலப்பகுதியில் வடக்கில் சிறப்பான கல்வி வளர்ச்சி […]

ரஷ்ய தீ விபத்துக்கு ஜனாதிபதி இரங்கள்

இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்ய அரசுடனும், மக்களுடனும் அவர்களது துயரை பகிர்ந்துக்கொள்வதற்கு இலங்கை அரசும், மக்களும் துணை நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கெமரோவா நகரிலுள்ள வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து ஜனாதிபதி வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக […]

க.பொ.த. சாதாரணதர பெறுபேறுகள் வெளியீடு : வேம்படி மாணவி முதலிடம்

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. பரீட்சைக்குத் தோற்றிய 73.05 வீதமான மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை இம்முறை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கம்பஹா – ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி – மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி – மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை – […]

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஐ.தே.கட்சியின் தீர்மானம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. அரசியல் தொடர்பில் அக்கறை காட்டி வரும் பலரும் எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன் போதுஇ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்இ ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர்ப்பார்க்கும் வகையில் மறுசீரமைப்பு […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 29.03.2018

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும்  நாள். ரிஷபம்: நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி […]

கண்டி கலவரத்தின் பின்னணியில் மஹிந்தவின் சகாக்கள்!

கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் இதுகுறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற […]

நம்பிக்கையில்லா பிரேரணை: திறந்த வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது திறந்த முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையால் அண்மையில் நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலையைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 55 உறுப்பினர்களுடைய கையெழுத்துக்களுடன் பிரதமர் ரணிலுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர். குறித்த பிரேரணை மீது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் […]

பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம், டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளில் பின்னர், அது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள […]

ஒன்றிணைந்த எதிரணியின் திட்டம் நிறைவேறாது

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீது அவர்களுக்கே உறுதியற்ற நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசும் மாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்;கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ”பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியே முதலில் […]