யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை உள்ளடக்கியதாக, கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இந்த சிறப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, ஆவா […]
Other News
தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவிடம் வழங்கப்பட வேண்டும்
அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இடைக்கால […]
வவுனியாவில் திடீரென தூக்கில் தொங்கிய இளைஞன்…கதறி துடிக்கும் குடும்பம்
வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா […]
இன்றைய ராசிபலன் 10.10.2018
மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் […]
இன்றைய ராசிபலன் 09.10.2018
மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிர பலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோக மான நாள். ரிஷபம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த முற்படு வீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை […]
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா? – கொதிக்கும் நெட்டிசன்கள்
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்றும், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது கேட்பது தவறான முன்னுதாரணம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தினகரனுடன் சந்திப்பு : பன்னீரின் பதவியை பறிக்க திட்டமிடும் எடப்பாடி?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து இறக்கி, தான் அந்த பதவியில் அமர வேண்டும் என்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ்- மற்றும் தனக்கும் நெருக்கமான ஒரு நபர் மூலம் சந்திப்பு நடந்தது. அவர் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பினார் என தினகரனும் ரகசியத்தை உடைத்து பேட்டி கொடுக்க தற்போது இந்த விவகாரம் […]
விஜயகலாவிற்கு முக்கிய தடைகளை விதித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது, விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் […]
விரல்கள் இல்லாதபோதும் பரிட்சையில் சாதனை படைத்த பாடசாலை மாணவன்
குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது ஆடை, அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார். ஒருபோதும் தனது […]
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!!
உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய போராளியாக விளங்கிய விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதி யுத்தத்தின் […]





