பிரகாஷ் ராஜை கேவலப்படுத்திய பாஜக வின் அருவருக்கத்தக்க செயல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கர்நாடகா மாநிலத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேடையை நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக வின் கொள்கைகளைப் பற்றியும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் தொடர் விமர்சனம் செய்து வருகிறார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ஆகியவற்றைப் பற்றியும் சாடி வந்தார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் குறித்தும் மோடியை வருத்தெடுத்தார் பிரகாஷ் ராஜ்.

இந்நிலையில் கர்நாடகாவில், சிர்சி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ் உத்தர கன்னடா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்து பேசினார். இது பாஜக இளைஞர் அணியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக இளைஞர் அமைப்பினர், நிகழ்ச்சி முடிந்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்தனர்

இதுகுறித்து பேசிய பாஜக இளைஞர் அணித் தலைவர் விஷால் மராதே தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர் எங்கள் வழிபாட்டு தலங்களை அசுத்தம் செய்கின்றனர். இவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்; இத்தகைய சமூக விரோதிகளை சமுதாயம் மன்னிக்காது என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *