கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அக்னி-5 ஏவுகணை ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று காலை 9.53 மணிக்கு வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

அக்னி-5 ஏவுகணை 5000 கி.மீ தூரம் வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மிக நீண்ட தூதரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்து சென்று எதிரிகளின் இடத்தை தாக்கக்கூடிய வல்லமை படைத்தது அக்னி-5. அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாண்டி 5 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.

துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிப்படுவதை விட வேகமாக பயணிக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. அதனால் இதனை வழிமறித்து தாக்குவதும், ரேடார் மூலம் கண்டறிவதும் கடினம். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வைத்திருக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

பிரதமர் உத்தரவிட்டால் மட்டுமே அக்னி 5 ஏவுகணையை ஏவ முடியும் என்ற விதி உள்ளது. நான்காவது அக்னி-5 சோதனை கடந்த டிசம்பர் 26, 2016 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தகக்து.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *