உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை

உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை 15 வயது சிறுமி என்றும் பாராமல், தனது மகளின் கழுத்தை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் பிரேதத்தை எடுத்து சென்று அவளது காதலனின் வீட்டுக்கதவு முன்னால் போட்டுவிட்டு வந்துள்ளார்.தற்போது அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

இந்த சம்பவம் காரணமாக வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க, சர்தாவல் பகுதியை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News