104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது – பிஎஸ்எல்வி.- சி37 புதிய உலக சாதனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது – பிஎஸ்எல்வி.- சி37 புதிய உலக சாதனை

செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக சாதனை நிகழ்த்தியது.

கார்டோசாட்-2 தொடரின் செயற்கைக் கோள் மற்றும் 103 நேனோ செயற்கைக் கோள்களைச் சுமந்த பிஎஸ்எல்வி- சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் கார்டோசாட்-2 தொடரின் செயற்கைக் கோள் மற்றும் பிற 2 செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது

வானிலை ஆய்வு கார்டோசாட்-2 செயற்கைக் கோள் மற்றும் 103 நேனோ செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தி உலக சாதனை நிகழ்த்தியுள்ளது இஸ்ரோ.

ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்படுவதன் மூலம், ரஷ்யாவின் தற்போதைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக் கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக் கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக் கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றது.

கார்டோசாட்-2 செயற்கைக் கோளின் எடை 714 கிலோ. ஒவ் வொரு நானோ செயற்கைக் கோளும் 5 முதல் 10 கிலோ வரை எடை கொண்டது. இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

கார்டோசாட்-2 செயற்கைக் கோள் அனுப்புகிற படங்கள் வரை படப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற் கும் பெரிதும் உதவிகரமாகவும், சிறப்புக்குரியதாகவும் இருக்கும்.

இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

இதுவரை அதிகபட்சமாக 37 செயற்கைக் கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது.

தற்போது 104 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்துவதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites