தெலுங்கானா மாநில சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருந்து சஸ்பெண்ட் – தெலுங்கானா பா.ஜ.க கட்சியினர் கண்டனப் பேரணி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தெலுங்கானா மாநில சட்டசபையில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் இன்று கண்டனப் பேரணி நடத்தினர்.

தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேரையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார்.

சபாநாயகரின் இந்த முடிவை கண்டித்து அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐதராபாத் நகரில் இன்று பேரணி நடத்தினர். சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளான எம்.எல்.ஏ-க்கள் ஐந்து பேரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது ஐதராபாத் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜ.க தலைவர்கள், மாநில அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பிய வண்ணம் சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *