பேய் கதையில் மிரட்ட வரும் நடிகை ஓவியா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஓவியா இணைந்து நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்கிறார்.

டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஓவியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். விரைவில் துவங்க உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஏற்கனவே சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – ஓவியா இணைந்து `இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பேய் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது

இந்நிலையில் இப்போது நடிக்கவிருக்கும் இப்படமும் காமெடி கலந்த பேய் படமாக உருவாகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *